மஇகா தலைவர்: விலகியிருங்கள்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மஇகாவின் உள்விவகாரத்திலிருந்து விலகி யிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த வாரம் முன்னைய மஇகா தலைவர் ஜி. பழனிவேலு ஏற்பாடு செய்த பொங்கல் கொண்டாட்டத்தில் தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் பங்கேற்றன. அதனை சுட்டிக்காட்டும் வகையில் எஸ். சுப்பிரமணியத்தின் வேண்டுகோள் வெளியாகியிருக்கிறது.

"ஆம், மஇகாவில் சில உட்கட்சிப் பிரச்சினைகள் இருக் கின்றன. அவற்றைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்றார் அவர். "நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக் கிறோம். அதையே பிற கட்சி களிடமிருந்து நாங்களும் எதிர் பார்க்கிறோம்," என்று நேற்று நடைபெற்ற இந்திய பெண்கள் தொழில் முனைவர் கூட்டத்தில் ஜி. சுப்பிரமணியம் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!