அரசாங்கத் திட்டங்களை வேக வேகமாக நிறைவேற்றி ஆதாயம் காண்பதில் அதிமுக முனைப்பு

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி ஆதா யம் காண்பதில் அதிமுக முனைப் பாக உள்ளதெனக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக நிறைவேற்றப் படாமல் கிடப்பில் கிடக்கும் திட் டங்களை எல்லாம் தேர்தல் அறி விப்பு வருமுன்னர் நிறைவேற்று வதிலும் அதிமுக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், அண்மைக் காலமாக அடுத்தடுத்து அரசாங்கத் திட்டங்கள் அறிமுகம் கண்டு வரு கின்றன. நேற்று முன்தினம் மட்டும் இரண்டு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதலாவதாக 65 சிற்றுந்துகள் உள் ளிட்ட 766 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்த அவர், பின்னர் இருசக்கர ஆம்புலன்ஸ் சேவையை யும் அறிமுகம் செய்தார்.

சுமார் 144 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்ட புதிய பேருந்து களை வாங்கும் திட்டம் எப்போதோ முடிவடைந்துவிட்டதாகவும் வாங் கப்பட்ட புதிய பேருந்துகளை சேவையில் அறிமுகம் செய்வதில் காலதாமதம் இருந்துவந்ததாகவும் தமிழக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இந்நிலையில், தேர்தலை மனதில் வைத்து 766 புதிய பேருந்துகளின் அறிமுகம் நடைபெற்றுள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிடுகிறது. சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால் எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் நிறைவேற்றக்கூடாது என்னும் விதி இருப்பதால் திட்டங்களை படுவேகமாக அறிமுகம் செய்வதில் அதிமுக அரசு கவனம் செலுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, வருகிற 16ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இடைக்கால வரவு=செலவுத் திட் டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் வாக்காளர்களைக் கவரும் அறிவிப்புகள் பல இடம்பெறலாம் என்றும் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்பாக அந்த அறிவிப்புகள் அமையக்கூடும் என்றும் கூறப் படுகிறது.

சென்னை அதிமுக தொண்டர் ஒருவர் புதிய வோல்ஸ்வேகன் காரை வாங்கி அதில் 18 கிலோ வெண்கலத்திலான ஜெயலலிதா சிலையை நிறுவியுள்ளார். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!