சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும்

தற்போதைய பொருளியல் சூழ் நிலையில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்களை அரசாங்க அமைப்புகள் புரிந்துகொண்டு அவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். வர்த்தகங்களுக்கு அரசாங்கம் கூடுதல் உதவி வழங்க வேண்டும் என்று அழைப்புகள் விடுக்கப் பட்டுள்ளபோதிலும் சிங்கப்பூரின் பொருளியலை மிரட்டிய 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியுடன் தற்போதைய சூழ்நிலையை ஒப்பிட முடியாது என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

"குறுகியகால சவால்களை நாம் சமாளித்து வரும் வேளையில், கூடுதல் புத்தாக்கம், உற்பத் தித்திறன் ஆகியவற்றுடன் குறைந்த மனிதவளத்துடனான நீண்டகாலப் பொருளியல் மறு சீரமைப்பைத் தொடர்வது மிகவும் முக்கியம்," என்று அமைச்சர் தெரிவித்தார். சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபையின் சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசிய திரு ஈஸ்வரன், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி மிதமான அளவில் ஒரு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடு வரை இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!