பிரதமரின் துணைவியாருக்கு முழங்கையில் காயம்

ஹோவர்போர்ட் விபத்து காரணமாகத் தமது இடது முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகப் பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் திருவாட்டி ஹோ சிங் (படம்) அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த விபத்து மூன்று வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக அவர் கூறி னார். தமது கைக்குக் கட்டு போடப்பட்டிருப்ப தாகவும் தாம் குணம் அடைந்து வருவதாகவும் அவர் கூறினார். முழங்கையில் வீக்கம் இருந்ததால் முதல் வாரத் தில் பாதியளவு திறந் திருக்கும் கட்டு போடப் பட்டிருந்ததாகவும் இரண் டாவது வாரத்தில் முழங்கை மூட்டு சீராவதற்கு முழுமையாக மூடப்பட்டிருந்த கட்டு போடப் பட்டிருந்ததாகவும் அவர் தெரி வித்தார்.

தற்போது முழங்கையை சிறிதளவு அசைக்க வழிவகுக்கும் கட்டு போடப்பட்டிருப்பதாகத் திருவாட்டி ஹோ சிங் கூறினார். சீனப் புத்தாண்டு அன்று தமது கணவருடன் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்று 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தின் 'ஸ்டோம்டிரூப்பர்'சுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது அவரது கைக்குக் கட்டுப்போடப்பட்டிருப்பது தெரிய வந்தது. பிரபலமாகி வரும் ஹோவர் போர்ட்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அக்கறை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் திருவாட்டி ஹோ சிங் (படம்: ஃபேஸ்புக்)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!