அமெரிக்க அதிபர் ஒபாமா தமது துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை ஆதரிக்காதவர்களுக்கு தான் ஆதரவு வழங்கப் போவதில்லை, அவர்களுக்கு தான் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதில்லை அவர்களுக்கு தனது வாக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார். இது குறித்து விவாதிப்பதற்கு அமெரிக்கர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க் கும் முக்கியமான நேரத்தில் துப் பாக்கிக் கட்டுப்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார். அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குவது, விற்பது தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒப்புதலின்றி அதிபர் ஒபாமா தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி சில விதிமுறைகளை அறிவித்தார்.
முன்னதாக, நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் அவர் எழுதிய கட்டுரையில், "துப்பாக்கிக் கட்டுப்பாடு தொடர்பாக நான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவது ஒருபுறமிருந்தா லும் ஒரு குடிமகன் என்ற நிலையில் நான் என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். "துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டத்தை ஆதரிக்காத எந்தவொரு வேட்பாளருக்கும், எனது ஜனநாய கக் கட்சி வேட்பாளர் உட்பட, நான் பிரசாரம் செய்ய மாட்டேன், ஆதரவு தர மாட்டேன்," என்று கூறியுள்ளார்.