சமூகத்தின் ஆதரவை எதிர்நோக்கும் மதுக்கலவை நிபுணர்

சுதாஸகி ராமன்

மதுக்கூடத்தில் முழுநேரமாகப் பணிபுரிவதாகத் தம் தாயாரிடம் கூறியபோது அதை அவரால் துளியும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. மதுக்கூடத் துறையில் பணி புரிவோரைப் பார்த்து முகம் சுளிக்கும் பலரின் மனநிலையே அப்போது அவருக்கும் இருந்தது. இந்நிலையில், சமுதாய வரம்பு களைத் தாண்டி வெளிநாடுகளில் தமது மதுக்கலவைத் திறன்களை வெளிப்படுத்தும் அளவுக்கு அத் துறையில் முன்னேறியுள்ளார் திரு யுக்னேஸ். கடந்த மாத இறுதியில் பெல்ஜி யத்தில் நடைபெற்ற மதுக்கலவைப் படைப்பில் சிங்கப்பூரைப் பிரதி நிதித்து 'காக்டெய்ல்ஸ்' எனப்படும் மதுக்கலவையைச் செய்து காட்ட யுக்னேஸுக்கு வாய்ப்பு கிடைத்தது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழ கத்தின் சிறப்பு வாடிக்கையாளர் களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் மதுக்கலவைப் படைப்பில், சிறப்பு 'காக்டெய்ல்ஸ்' மதுக்கல வைகளை 28 வயது யுக்னேஸ் தயாரித்து விருந்தினர்களுக்கு அளித்து சிங்கப்பூரின் தனித்து வத்தை வெளிப்படுத்தினார். சிங்கப்பூர் சமையற்கலையில் முக்கியமான அங்கம் வகிக்கும் பாண்டான் இலைகளைப் பயன் படுத்தி 'காக்டெய்ல்ஸ்' மதுபானங் களைச் செய்த இவர், அதற்காக சிங்கப்பூரிலிருந்து 20 கிலோகிராம் எடையுள்ள பாண்டான் இலை களைக் கொண்டு சென்றார். தமது 19ஆம் வயதில் மதுபா னக் கலவையைத் தயாரிப்பதில் பயிற்சி பெற்ற அவர், தற்போது தேசிய கலைக்கூடத்தின் மேல்மாடி யில் அமைந்திருக்கும் 'ஸ்மோக்ஸ் அண்ட் மிரர்ஸ்' எனும் நவநாகரிக மதுக்கூடத்தில் தலைமை மதுக் கலவை நிபுணராகப் பணிபுரிகிறார்.

வெளிநாடுகளிலும் தமது மதுக்கலவைத் திறன்களை வெளிக்காட்டி சாதித்து வருகிறார் திரு யுக்னேஸ். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!