காதலர் தினத்தன்று ‘போக்கிரி ராஜா’ படத்தின் பாடல் வெளியீடு

ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'போக்கிரி ராஜா'. 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டை வருகிற 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல், இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

'போக்கிரி ராஜா' படத்தை பி.டி.செல்வகுமார் பிரம்மாண்டமாக தயாரித்தள்ளார். காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் சார்பில் சிவா இப்படத்தை வெளியிடுகிறார். பிப்ரவரி 26ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!