‘அஞ்சலி’யாக நடிக்கிறார் ஷாமிலி

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'அஞ்சலி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷாமிலி. இதையடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவை விட்டு ஒதுங்கினார். படிப்பு முடிந்ததும் முதலில் தெலுங்கு சினிமா உலகில் நாயகியாக அறிமுகமானார். இப்போது தமிழில் 'வீரசிவாஜி' படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுவையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஷாமிலி, அஞ்சலி என்ற பெயரிலேயே நடிக்கிறாராம். அஞ்சலி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, இப்போது கதாநாயகியாகவும் அஞ்சலி என்ற பெயருடன் தமிழுக்கு அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரம் பிரபு டாக்சி ஓட்டுநராக நடிக்கிறார். புதுவையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் இடைப்பட்ட பயணத்தில் நடப்பதே 'வீரசிவாஜி' படத்தின் கதை. இதில் ஷாமிலி, விஜய் ரசிகையாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!