லயனல் மெஸ்ஸிக்கு சிறுநீரகக் கல் சிகிச்சை

மட்ரிட்: உலகின் தலைசிறந்த காற்பந்து ஆட்டக்காரரான லயனல் மெஸ்ஸிக்கு சிறுநீரகக் கல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. திங்களும் செவ்வாயும் அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக பார்சிலோனா காற்பந்துச் சங்கம் தெரிவித்தது. ஐந்து முறை உலகின் தலைசிறந்த ஆட்டக்காரருக்கான விருதை வென்றிருக்கும் மெஸ்ஸிக்கு சிறுநீரகக் கல்லை ஒலிக்கதிர்கள் மூலம் உடைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற்ற போட்டியில் சிறுநீரகக் கோளாறு காரணமாக மெஸ்ஸி விளையாடவில்லை. ஆனால் பின்னர் நலம்பெற்ற அவர் இறுதியாட்டத்தில் அர்ஜென்டினாவின் ரிவர் பிளேட்டுக்கு எதிராக முதல் கோலைப் புகுத்தினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!