சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: கணவன், மனைவி சிறையில் அடைப்பு

சென்னை: சிங்கப்பூர், கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த கண வன், மனைவி கைது செய்யப் பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையாளர் அலு வலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில்,"சென்னை மூகாம்பிகை நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (32), அவரது கணவர் வைரமணி (32) இருவரும் சேர்ந்து சிங்கப்பூர், மஸ்கட், கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக என்னைப்போல் பலரி டம் ரூ.30 லட்சம் வரை வசூல் செய்தனர். "ஆனால், உறுதி அளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் எங்களது பாஸ்போர்ட்களையும் அவர்கள் திரும்ப ஒப்படைக்கவில்லை. என வே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாள்ர ஜெயக்குமார் மேற்பார்வையில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு ஆய்வாளர் நீலாவதி தலை மையில் தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் வைரமணி, உமா மகேஸ்வரி ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பண மோசடி செய்தது உறுதி செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து இரு வரையும் போலிசார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!