வெற்றியுடன் விடைபெற்றார் மெக்கல்லம்

ஹேமில்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தின் வெற்றியை உறுதிசெய்து தொடரைக் கைப்பற்றிய கையோடு அனைத்துலக ஒருநாள் போட்டிகளிலிருந்து தாம் விடைபெறுவதாக அறிவித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். ஆஸ்திரேலிய அணி நியூசி லாந்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி யது. முதல் போட்டியில் நியூசி லாந்து 159 ஓட்டங்கள் வித்தி யாசத்திலும், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றன. மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி ஹேமில்டன் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டன் மெக்கல்லம் 3 சிக்சர்கள் விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த 4வது வீரர் என்ற பெருமையுடன் அவர் ஓய்வு பெற்றார். 46 ஓவர்களில் அனைத்து விக்கெட் டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 247 ஓட்டங்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். படம்: ஏஎஃபி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!