மதுக்கடைகளை மூடியதால் அதிருப்தி: கேரள அரசுக்கு எதிராக வரிந்து கட்டும் மதுப்பிரியர்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநில மதுப்பிரியர்கள் அம்மாநில அர சுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயாராகி வருகின்றனர். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதில் அம்மாநில அரசு முனைப்பாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. முதற் கட்டமாக மதுவிடுதிகளை மூடிய கேரள அரசு, அடுத்தகட்டமாக மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி வருகிறது.

இதன் காரணமாக மது அருந்துவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள மது அருந்துவோர் பாது காப்பு அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் எம்.தாமோதரன், மதுக்கடைகளின் எண்ணிக் கையை குறைத்துவிட்டதால் மது குடிப்போர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். "மது விற்பனையால் கேரள அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவு வருவாய் கிடைக்கிறது. ஆனால், மது அருந்துபவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துகிறது அரசு. "கேரள அரசின் வருவாயில் 60 விழுக்காடு மது விற்பனையால் வருகிறது. ஒவ்வொரு மதுப் புட்டிக்கும் 250 விழுக்காடு வரியை அரசு விதிக்கிறது. ஆனால், பெரும்பாலான மதுக் கடைகள் இருட்டான, பாழடைந்த நிலையில் சுகாதாரமற்று காணப் படுகின்றன," என்றார் தாமோ தரன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!