டுனா மீனை 117,000 டாலருக்கு வாங்கிய சு‌ஷி உணவகம்

தோக்கியோ: ஜப்பானிய மீன் சந்தையில் ஏலத்தில் விற்கப்பட்ட மிகப் பெரிய டுனா மீனை 117,000 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார் பிரபல சு‌ஷி உணவகங்களின் முதலாளி கியோ‌ஷி கிமுரா. புத்தாண்டின் முதல் நாள் வியாபாரத்தின்போது மொத்த விற்பனைச் சந்தையில் இந்த மீன் ஏலத்தில் விற்கப்பட்டது. ஜப்பானின் வடக்குக் கடலோரத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீனின் எடை 200 கிலோ கிராம். சென்ற ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்ட இந்த வகை டுனா மீனின் விலையைப் போல் மூன்று மடங்கு விலை கொடுத்து இந்த மீனை வாங்கியிருக்கிறார் சு‌ஷி உணவக முதலாளி. இருப்பினும் இந்த விலை 2013ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க குறைவுதான் என்று கூறப்படு கிறது. நீலநிற டுனா மீனின் விலை வழக்கமாக அதிகமாகவே இருக்கும். சு‌ஷி உணவகங்கள் மீன் பிரியர்களுக்கு பிரபலமானவை. டுனா மீன் சூப், மீன் கறி இவற்றின் விலை ஆயிரக்கணக்கான யென் வரை இருக்கும் என்று கூறப் படுகிறது. ஏலத்தில் வெற்றி பெற்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று சு‌ஷி உணவக முதலாளி கூறினார். ஜப்பானில் ஏலத்தில் விற்கப்பட்ட டுனா மீனை விலைக்கு வாங்கிய சு‌ஷி உணவக முதலாளி கியோ‌ஷி கிமுரா தோக்கியோ அருகே உள்ள தனது உணவகத்தில் அந்த மீனை காண்பிக்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!