சிங்கப்பூரிலும் ஆலயங்கள் கடைப்பிடிக்கும் ஆடைக்கட்டுப்பாடு

ப. பாலசுப்பிரமணியம்

முறையான, பாரம்பரிய ஆடைகள் அணிந்துதான் இந்துக் கோயில்களுக்குச் செல்லவேண்டும் எனும் சட்டம் சிங்கப்பூரில் இல்லை என்றாலும் மக்கள் முறையான ஆடைகளுடன் கோயில்களுக்கு வருவதை இங்குள்ள பல இந்துக் கோயில்கள் பக்தர்களையும் சுற்றுப் பயணிகளையும் ஊக்குவித்து அதனை எடுத்துரைத்தும் வந்து உள்ளன. தமிழ்நாட்டில் இம்மாதம் 1ஆம் தேதி இது குறித்த சட்டம் அமலாக்கப்பட்டதை இங்குள்ள ஆலயங்களும் பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

இம்மாதம் முதல் தமிழகம் முழுவதும் இந்துக் கோயில்களுக்கு செல்ல ஆடைக் கட்டுப்பாடு விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆன்மிக உணர்வை ஊக்குவிக் கும் நோக்குடன் அமல்படுத்தப் பட்ட சட்டம் அது. ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள், 'பெர்முடாஸ்' (முழங்காலைத் தாண்டும் கால்சட்டை), லுங்கி 'லெக்=இன்ஸ்' ஆகியவற்றை அணிந்திருந்தால் கோயிலுக்குள் செல்ல முடியாது. இந்திய பாரம்பரிய ஆடை களான வேட்டி, ஜிப்பா போன்ற வற்றை ஆண்களும் புடவை, சுடி தார், பாவாடை தாவணி போன்ற வற்றை பெண்களும் அணிந்து கோயில்களுக்கு வரலாம்.

தற்போது சிங்கப்பூரிலுள்ள இந்துக் கோயில்களும் ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றன. கட்டாய விதிமுறை யாக இல்லாவிட்டாலும் கோயில் வாசலில் பதாகைகள் மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் முறையான ஆடை அணிதல் குறித்த விழிப்புணர்வை அவை ஏற்படுத்தி வருகின்றன. பல கோயில்களில் பதாகை கள், அறிவிப்புப் பலகைகள், கை யேடுகள் ஆகியவற்றின் மூலம் முறையான ஆடைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும் சில கோயில்களில் பாவாடை களையும் மேலாடைகளை யும் இரவல் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!