ஒருவரின் கலாசாரம் மீது மற்றவர் ஆர்வம் காட்ட வலியுறுத்து

சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் கலாசாரத்தைப் பற்றி ஆர்வத்துடன் தெரிந்துகொள் வதோடு இயன்றவரை அவற்றில் பங்கேற்க வேண்டும் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் அதன் 50 ஆண்டு முன்னேற்றத்திற்குப் பின்னர் நாட் டின் பொருளியல், கலாசாரம், அடை யாளம் ஆகியவற்றில் ஆர்வம் மிகுந்த கட்டத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூர் சீன குலவழிச் சங் கங்களின் சம்மேளனம், பிசினஸ் சைனா, சிங்கப்பூர் சீன கலாசார மையம் ஆகியன நேற்றுக் காலை ஏற்பாடு செய்த வருடாந்திர சீனப் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று திரு தர்மன் பேசினார். சீன சமூகத்தைச் சேர்ந்த சுமார் 500 விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்வை நடத்தும் இந்த மூன்று அமைப்புகளும் வருங்காலத்தில் சிங்கப்பூரின் அடையாளத்தை ஆழமாக விதைப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றும் என்றார் பொருளியல், சமூகக் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன். "அமைதியான, பல இன சமூகமாக நாம் இப்போது இருப்பது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளில் இந்திய அமைச்சர் ஒருவர் கலந்து கொள்வது என்பது சாதாரண நிகழ்வு. "இருந்தபோதிலும் வருங்கால சிங்கப்பூருக்காக நாம் நமது அடை யாளத்தை வலுவாக்க வேண்டும்.

ஒருவரின் கலாசாரத்தில் மற்றவர் பங்கேற்பது என்பது சிங்கப்பூரின் கலாசார அடையாளங்களை ஒன்றுகலப்பது என்றோ வெவ்வேறு கலாசாரங்களை ஒன்றாக ஆக்குவது என்றோ பொருள்படாது. அவ்வாறு செய்தால் பலவீனமான, குழப்பமான கலாசாரத்தையும் அடையாள உணர்வையும் சிங்கப்பூரர் களிடையே ஏற்படுத்தி விடும். "நாம் ஒவ்வொருவரின் அடை யாளங்களையும் பாதுகாக்க வேண்டும். "உதாரணமாக, ஷெண்டன் வேயில் உள்ள சிங்கப்பூர் சீன கலாசார மையத்தின் 11 மாடிக் கட்டடம் உள்ளூர் சீன மக்களுக்கானது மட்டுமல்ல; சிங்கப்பூரில் மாறி வரும் சீன கலாசாரத்தை அனைத்து சிங்கப்பூரர்களும் கற்றுக்கொள்வதற்கான இடம் அது. "அதேபோல, பெரும்பான்மை சமூகம், மலாய் கலாசாரத்திலும் இந்திய கலாசாரத்திலும் இவ்வட்டாரத்திலுள்ள இதர கலாசாரங்களிலும் ஆர்வம் கொள்ள வேண்டி உள்ளது," என்றார் திரு தர்மன்.

புத்தாண்டு குதூகலத்தை 'செல்ஃபி'யாகப் பதிவு செய்யும் நிகழ்வு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!