வீராசாமி ரோடு அடுக்கு வீட்டில் தீ: 40 பேர் வெளியேற்றம்

ப. பாலசுப்பிரமணியம்

லிட்டில் இந்தியா பகுதியான வீராசாமி ரோட்டில் உள்ள புளோக் 633ல் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. மாலை 4 மணி யளவில் இச்சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட் டது. ஓர் ஆம்புலன்ஸும் ஏழு தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. அந்த புளோக்கின் ஒன்பதாவது மாடியிலுள்ள வீடு ஒன்றில் தீப் பற்றி எரிந்ததால் அந்த இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள் பத்து நிமிடங்களில் தீயை கட்டுக் குள் கொண்டு வந்து அணைத் தனர்.

ஒன்பதாவது மாடியில் தீப் பிடித்ததால் அதன் மேலும் கீழும் உள்ள தளங்களில் குடியிருக்கும் சுமார் 40 பேர் அவசரமாக வெளி யேற்றப்பட்டதாகவும் தீச்சம்பவத் தால் யாருக்கும் காயமில்லை என் றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீப்பிடித்தற் கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்பதாவது மாடியில் தீயினால் உருக்குலைந்த வீடு. படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!