மியன்மார் விமான விபத்தில் நால்வர் பலி

நைப்பிடா: மியன்மாரில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட் டின் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் நைப்பிடாவில் நிகந்த விபத்தில் ஆகாயப் படைக்கு சொந்தமான விமானம் மேலே ஏறிய சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த ஐந்து பேரும் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுப்பட்டபோது விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் விழுந்த இடத்தில் ஏராளமானவர்கள் கூடினர். விமானச் சிதைவுகள் எரிந்து கொண்டிருந்ததை தீ அணைப்பாளர்கள் அணைத்தனர்.

"நான்கு பேர் மாண்டுவிட்டனர். ஒருவர் உயிருடன் இருக்கிறார்," என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னார். இதற்கிடையே இந்தோனீ சியாவின் ராணுவ விமானம் ஒன்றும் நேற்று விபத்துக்குள் ளானது. சோதனை ஓட்டத்தில் கிழக்கு ஜாவாவில் மக்கள் நிறைந்த இடத்தில் விமானம் விழுந்தது என்று இந்தோனீசிய விமானப் படை அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் பற்றி உடனடியாகத் தெரியவில்லை. அதில் ஒரு விமானியும் ஒரு பொறியாளரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மியன்மாரில் விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தின் சிதைவுகளை அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். இந்த விபத்தில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!