இந்தியாவை வீழ்த்திய இலங்கை

புனே: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடந்தது. பூவா தலையாவில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ரஜிதா என்ற வேகப் பந்து வீச்சாளரும் டிக்வெல்லா என்ற விக்கெட் கீப்பரும் டி20 தொடரில் அறிமுகமானார்கள். இந்திய அணியில் விராத் கோஹ்லிக்குப் பதிலாக ரகானே சேர்க்கப்பட்டார்.

2வது பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ரோகித் சர்மா வெளியேறினார். கடைசி பந்தில் ரகானே வெளியேறினார். அறிமுகமான முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே ரஜிதா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்களை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கள் மீளவிடவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. அதிக அளவில் ஸ்விங்கும், பவுன்சும் இருந்தது.

இதனால் பேட்ஸ்மேன்கள் சொற்ப ஓட்டங்களின் ஆட்ட மிழந்தார்கள். அஸ்வின் மட்டும் சிறப்பாக ஆடி 31 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் இந்தியா 18.5 ஓவரிலேயே 101 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணி ஆட்டமிழந்தது.

ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ரஜிதா (இடமிருந்து இரண்டாவது). படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!