கெயில் திட்டம்: 5,800 விவசாயிகள் தனித்தனியே வழக்கு

சென்னை: எரிவாயுக் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 5800 விவசாயிகள் உயர் நீதிமன் றத்தில் தனித்தனியே வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் தாமதப்படும் எனக் கூறப்படுகிறது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு எரிவாயுக் குழாய் கொண்டு செல் லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. இதற்காக 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலத்தில் எரிவாயுக் குழாய்களை அமைப்பது என அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத் துக்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம் பியது. தமிழகத்தின் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழி கர்நாடகா வரை எரிவாயுக் குழாய் கள் அமைக்கப்பட்டால் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். ஆனால் விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் அமைத்தால் தங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற் படும் என ஏழு மாவட்டங்களின் விவசாயிகள் கவலை தெரிவித் தனர். இதையடுத்து விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!