ஆன்மிக சர்ச்சையில் கருணாநிதி

கடவுள் நம்பிக்கையற்ற நாத்திக ரான திமுக தலைவர் கருணாநிதி யின் வீட்டில் கடந்த வாரம் வேத மந்திரங்கள் ஓதப்பட்டதாக காணொளி ஒன்று இணையத்தளத்தில் உலா வருகின்றது. திருப்பதி ஆலயத்தைச் சேர்ந்த ஓதுவார்கள் கருணாநிதி முன்னிலையிலேயே அவற்றைப் பாடுவதாக அமைந்த வீடியோ இணையவாசிகளிடையே சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

கடவுள் இல்லை என்று கூறும் திராவிட இயக்கத்திலிருந்து தோன்றிய திமுக, ஒருகாலத்தில் கடவுள் நம்பிக்கை விஷயத்தில் மிகக் கடுமையாக இருந்தது.

காங்கிரசில் சேருமுன் திமுகவில் இருந்த நடிகர் சிவாஜிகணேசன் திருப்பதி கோவிலுக்குச் சென்று வந்தார் என்பதற்காக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்படி கடுமையாக இருக்கும் திமுகவின் தலைவர் வீட்டில் திடீ ரென ஆன்மீக வாடை வீசக் கார ணம் என்ன?

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக தலைவர் கருணாநிதி வைணவப் புனிதரான ராமானுஜர் தொடர்பான தொலைக்காட்சி தொடருக்குக் கதை வசனம் எழுது கிறார் என்ற விஷயம் விவாதப் பொருளானது.

நாத்திகரான கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை சிதைத்து விட வாய்ப்பிருப்பதாக விமர் சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், 'கலைஞர் தொலைக் காட்சி'யில் ஒளிபரப்பாகிவரும் ராமானுஜர் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலை யில், ராமானுஜர் தொடரை 'ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி' ஒளி வழியில் தெலுங்கில் ஒளிபரப்ப அனுமதி கோரி திருமலை திருப் பதி தேவஸ்தான அதிகாரிகளும் ஓதுவார்களும் கடந்த புதன் கிழமை கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!