நடிகர் சங்க நிலத்தை மீட்டுள்ளோம்: கார்த்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை இரண்டேகால் கோடி ரூபாய் கொடுத்து மீட்டுவிட்டதாக அச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் மோதல் ஏற்பட காரணமாக இருந்த பிரச் சினைக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் சங்கத் தின் புதிய பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் கடந்த 2010ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக எஸ்.பி.ஐ. சினிமாஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கடந்த நிர்வாகத்தால் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் அது தற்போது ரத்து செய்யப் பட்டதாகவும் கூறினர்.

"அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது சட்டப்பட்டி தவறானது என சங்க உறுப்பினர் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்தார். நடிகர்களும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி பலமுறை கோரிக்கை வைத்தோம். "அது நிறைவேறாததால் தேர்தலில் நின்றோம், வெற்றியும் பெற்றோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி பதவிக்கு வந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தனி யார் நிறுவனத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். "நடிகர் சங்க உறுப்பினர்களைக் கணக்கெடுக்கும் பணி 45 நாட்களாக நடந்து முடிவடைந் துள்ளது. 2,200 உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளன. "இவை இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு அரசு உதவிகள், வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். விரைவில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும்," என்று கார்த்தி யும் பொன் வண்ணணும் மேலும் தெரிவித்தனர்.

நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் விஷால், கார்த்தி, பொன்வண்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!