நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 9 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்

நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் ஒன்பது புதிய இளங்கலைக் கல்வித் திட்­டங்களை நேற்று அறி­மு­கம் செய்தது. வளர்ந்து வரும் துறை­க­ளான வர்த்­த­கம், பொறி­யி­யல், அறி­வி­யல் ஆகிய துறை­களில் அறி­மு­கப்­படுத்­தப்­பட்ட இந்த திட்­டங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாண­வர்­கள் தேர்ந்­தெ­டுத்து படிக்­க­லாம். இவற்­றில் இரு சிறப்பு ஒருங்­கிணைந்த திட்­டங்களும் அடங்­கும். அவ்விரு திட்­டங்களி­லும் மாண­வர்­கள் 'ஹானர்ஸ்' பட்­டத்தை­யும் நிதி பொறி­யி­யல் துறையில் முது­கலைப் பட்­டத்தை­யும் நான்கு ஆண்­டு­களில் பெறலாம். அவர்­கள் நான்காம் ஆண்டில் பயிலும்போது அமெ­ரிக்­கா­வின் 'கார்னகி மெல்லன் பல்­கலைக் ­க­ழ­கத்­தில் மாணவர் பகிர்­வுத் திட்­டத்­தி­லும் கலந்­து­கொள்­வார்­கள். அங்­குள்ள பாடத்­திட்­டங்களில் பயின்று அவற்றை வெற்­றிக­ர­மாக முடித்­த­ பி­றகு அந்தப் ­பல்­கலைக்­க­ழ­கத்­தின் 'கம்­பியூடே­ஷ­னல் ஃபைனான்ஸ்' சான்­றி­தழை­யும் மாண­வர்­கள் பெறுவர்.

இது தவிர, வர்த்­த­கம் அல்லது கணக்­கி­யல் பாடத்தை முக்­கி­யப் பாட­மா­க­வும் உத்­தி­பூர்வ தகவல் தொடர்பை துணைப்­பா­ட­மா­க­வும் பயி­லக்­கூ­டிய இரு இளங்கலைக் கல்வித் திட்­டங்களை­யும் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் புதிதாக வழங்­கும். பொறி­யி­யல் அல்லது அறி­வி­யல் பாடத்­தில் ஆர்வம் உள்ள மாண­வர்­கள் அத்­துறை­களில் கூடு­த­லாக ஐந்து திட்­டங்களை எதிர்­பார்க்க­லாம். பொறி­யி­யல், அறி­வி­யல் பாடங்களை முக்­கி­யப் பாட­மா­க­வும் வளர்ந்து வரும் துறை­க­ளான மருந்த­கப் பொறி­யி­யல், உணவு அறி­வி­யல் தொழில்­நுட்­பம், மருத்­துவ உயி­ரி­யல், 'பயோ­மெ­டிக்­கல்ஸ் மெட்­டீ­ரி­யல்ஸ்' பொறி­யி­யல் ஆகி­ய­வற்றை இரண்டாம் முக்­கி­யப் பாட­மா­க­வும் பயிலக்கூடிய ஐந்து புதிய பாடத்­திட்­டங்களை­யும் பல்­கலைக்­க­ழ­கம் வழங்­கு­கிறது. ஒன்பது புதிய பாடத்­திட்­டங்களு­டன் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கம் இந்த ஆண்டில் மொத்தம் 103 இளங்கலைப் பாடத்­திட்­டங்களை வழங்­கு­கிறது. மேல் விவ­ரங்களுக்கு http://www.ntu.edu.sg/ இணை­யத்­த­ளத்தை நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!