மிஸ்பாவுக்கு அபராதம்; ஓய்வு குறித்து பரிசீலனை

மெல்பர்ன்: மெல்பர்ன் டெஸ்ட்டில் மெதுவாகப் பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கிற்கு (படம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா=பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆஸ்திரே லியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா இன் னிங்ஸ் மற்றும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இரண் டாவது இன்னிங்சில் 163 ஓட்டங்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்சில் 624 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அந்த அணியின் தலைவர் ஸ்மித் 165 ஓட்டங்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீசும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. ஐ.சி.சி. விதிமுறையின்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்களைக் குறைவாக வீசியிருந்தார்கள். இதனால் அந்த அணித் தலைவர் மிஸ்பா விற்கு இந்தப் போட்டிக்கான சம்பளத்திலிருந்து 40 விழுக் காடு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்ற வீரர்களுக்குத் தலா 20 விழுக்காடு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ஐ.சி.சி. விதிப்படி குறைவாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 10 விழுக்காடு அபராதமாக விதிக்கப்படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பங்ளாதேஷ் தரப்பில் பந்தடிக்கும் சபிர் ரஹ்மான் (வலது). படம்: ஏஎஃப்பி

17 Sep 2019

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

ஆர்சனலின் இரண்டாவது கோலைப் போடும் பியா எமெரிக் ஒபமயாங். படம்: ராய்ட்டர்ஸ்

17 Sep 2019

இபிஎல்: வெற்றியை நழுவவிட்ட ஆர்சனல்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

17 Sep 2019

‘அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’