புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு: இன்று நகைக் கடைகள் மூடப்படும்

சென்னை: நகைகள் வாங்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறையைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள நகைக் கடைகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. நகைக்கடைகளில் 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் நகைகள் வாங்கும்போது, நிரந்தரக் கணக்கு எண் அட்டை (பான் கார்டு) காண்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு அகில இந்திய தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து கடை யடைப்புப் போராட்டத்திற்கு இச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தென் மண்டல தலைவர் அனந்த பத்மநாபன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் புதிய விதிமுறை காரணமாக நகைக்கடைகளில் முப்பது விழுக்காடு அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

"இந்தியாவில் பெரும்பாலான வர்களுக்கு 'பான் அட்டை' இல்லாததால் எங்களிடம் நகை வாங்க வருவதில்லை. இதனால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கள்ளச் சந்தை விற்பனை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. "இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைக் கலை ஞர்கள், ஊழியர்கள், சிறு தொழில் செய்பவர்கள் என சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்," என் றார் பத்மநாபன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!