சென்னை: சின்ன பையனும் அப்பாவின் அரசியலும் என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதையை அதிமுக வினர் வெகுவாக ரசித்தனர். நேற்று சென்னையில் அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட 14 பேரின் இல்லத் திருமணங்கள் ஜெயல லிதா தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் மணமக்களை வாழ்த்திப் பேசியபோதே அவர் மேற்குறிப்பிட்ட சுவாரசியமான கதையைக் கூறினார். "அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக் கொடுக்கும். ஒரு சின்ன பையன் தன் தந்தையிடம் சென்று தனக்கு அரசியல் பாடம் கற்றுத் தருமாறு கேட்டான். "தந்தை தனது மகனைப் பார்த்து மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனயன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடம் இல்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடி யும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயேதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். "தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன் 'தந்தையே உங்களைப் பார்த்தே நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந் தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுத்தர வேண்டும்' என்றான்," என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஏணி ஒன்றை எடுத்து வந்து, அதை சுவரில் சாய்த்து, மேலே ஏறுமாறு தன் மகனிடம் அந்த தந்தை கூறியதாகக் குறிப்பிட்ட ஜெயலலிதா, மேலே உள்ள பர ணில், தாம் அரசியலில் நிலைத்து நிற்கக் காரணமான விஷயங்களை நெஞ்சைத் திறந்து எழுதி வைத்திருப்பதாகவும் அரசியல் பற்றிய அனைத்துப் பாடங்களும் அவற்றில் உள்ளதாகவும் தந்தை கூறியதாகத் தெரிவித்தார். "ஏணியைப் பிடித்துக் கொள்வ தாக தந்தை கூறவே, மகன் மெதுவாக ஏணியில் ஏறினான். அவன் உச்சிக்குப் போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த தன் கையை எடுத்துவிட்டார். ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்துவிட்டான். வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன். "என்னப்பா இப்படி கைவிட்டு விட்டாயே, உன்னால்தான் எனக்கு இடுப்பில் இப்போது அடிபட்டு இருக்கிறது என்று கூச்சலிட்டான் மகன். தந்தை சிரித்துக்கொண்டே 'எல்லாவற் றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?' என்று கேட்டார். இதுதான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்துகொண்ட மகன், 'அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமே தான் வளர்த்துக்கொள்ள வேண் டும்' என்று முடிவெடுத்தான்," என்று ஜெயலலிதா கூறியபோது அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
இந்த சம்பவத்துக்குப் பின் னர், மகனுக்கு அந்தத் தந்தை கடிவாளம் போட்டதாகவும் குறிப் பிட்டார். அரசியல் எவ்வளவு ஆபத்தா னது என்பதற்காகத்தான் தாம் இந்தக் கதையைக் கூறியதாகக் குறிப்பிட்ட அவர், இதைக் கேட்டு விட்டு யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு தாம் பொறுப்பல்ல என்றார். இதுவும் அரங்கில் பலத்த கைத்தட்டலைப் பெற்றது.