`100 கோடி இழப்பீடு கோரி வழக்கு: டோனி மிரட்டல்

புதுடெல்லி: ஆட்ட நிர்ணயத்தில் தாம் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட இந்தி நாளிதழ் அது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் டோனி சட்ட ரீதியாகக் கடிதம் அனுப்பி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு ஓல்ட் டிராஃபோர்டில் இங்கி லாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் டோனி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என இந்திய அணியின் அப்போ தைய மேலாளர் சுனில் தேவ் கூறியதாக அந்த இந்தி நாளிதழ் தெரிவித்து இருந்தது.

ஆடுகளம் ஈரமாக இருந்த போதும் டோனி வேண்டுமென்றே முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தார் எனக் குற்றம் சாட்டப் பட்டது. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி கண்டது. ஆனால், தாம் அப்படி எதுவும் சொல்லவே இல்லை என்று சுனில் தேவ் மறுத்திருந்தார். இந்நிலையில், டோனியின் வழக்கறிஞர்கள் ஒன்பது பக்கக் கடிதம் ஒன்றை அந்நாளிதழுக்கு அனுப்பியுள்ளனர். அதில், "எமது கட்சிக்காரரை அவமதிக்கும் நோக்கில் வெளி யான செய்தியால் அவர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள் ளார். இதற்காக, ரூ.100 கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடர அவருக்கு முழு உரிமையுள்ளது," என்று எச்சரிக் கும் தொனியில் சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படு கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!