முதல்முறையாக நடத்தப்படும் பொதுப் பேருந்து விழா

சிங்கப்பூரின் பொதுப் பேருந்துச் சேவையின் இறந்தகாலம், நிகழ் காலம், எதிர்காலம் குறித்து கண்காட்சி நடத்தப்படவிருக் கிறது. 1960களில் இயங்கிய பழைய பேருந்துகள், பேருந்துப் பயணச் சீட்டுகள் முதலியவை எப்படி இருந்தன என்பதைப் பொதுமக்கள் கண்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பேருந்து விழாவில் பொதுப் பேருந்துகளுக்கான புதிய நிறமும் அறிவிக்கப்படும். பச்சை, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்களில் (படம்) ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பேருந்துக்கான நிறத்தை நிர்ணயிக்க பொது வாக்களிப்பு நடத்தப்பட்டது. முதல்முறையாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சி அடுத்த மாதம் 11ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதி வரை நீ ஆன் சிட்டியில் உள்ள சிவிக் பிளாசாவில் நடைபெறும். அதனை அடுத்து, அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விவோசிட்டியில் நடைபெறும். ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி யிலிருந்து 3ஆம் தேதி வரை தோ பாயோ வீவக மையத்திலும் கண் காட்சி நடைபெறும். கண்காட்சி காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அடுத்த மாதம் 11ஆம் தேதியில் மட்டும் நண்பகல் 12 மணி யிலிருந்து இரவு 8 மணிக்குக் கண்காட்சி நடைபெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!