கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பு, எதிர்க்கட்சி என இரு கட்சி உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவினர் 1எம்டிபி நிறுவனம் தொடர்பாக நடத்தும் விசாரணையை நேரில் காணச் சென்ற ஊடக பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் தேசிய முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இது குறித்து புதன்கிழமை தகவல் கிடைத்த ஊடகத் துறையினர் நேற்று விசாரணையை நேரில் காண நாடாளுமன்றத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் 1எம்டிபியின் முன்னாள் தலைவரான டான் ஸ்ரீ முகமது பாக்கெயிடம் விசாரணை தொடர்பாக அவரது கருத்துகளைக் கேட்க நாடாளுமன்றத்தில் விசாரணை நடக்கும் அறைக்கு வெளியே காத்திருந்த ஊடகத் துறையினர் அவரிடம் பேச முடியாமல் போனதாக தி ஸ்டார் செய்தித்தாள் கூறுகிறது.