கொரிய எல்லையில் தொழிற்பேட்டை மூடல்

பாஜு: தென்கொரியாவின் எண்­ணற்ற நிறு­வ­னங் களின் முத­லா­ளி­கள் வட­கொ­ரி­யா­வி­லி­ருந்து கொரிய எல்லை யைக் கடந்து தென்­கொ­ரி­யாவை நோக்கித் திரும்­பி­யுள்­ள­னர். சென்ற மாதத்­தின் அணு­வா­யு­தச் சோதனைக்­குப் பிறகு சென்ற வாரம் வட­கொ­ரியா ஈடு­பட்ட தொலைதூர ஏவு­கணைச் சோதனையை அடுத்து அந்­நாட்­டின் மீது பொரு­ளா­தா­ரத் தடை விதிக்­கப்பட்­ட­தால், பத்­தாண்­டு­களுக்­கும் மேலாக செய்­யப்­பட்ட முத­லீ­டு­கள், நிறு­வ­னங்களை விட்டு விட்டுத் திரும்ப வேண்டிய நிலை தொழிலதிபர்களுக்கு ஏற்­பட்­டுள்­ளது. இந்­நிலை­யில், வட­கொ­ரி­யா­வில் இருக்­கும் கேசோங் தொழிற் ­பேட்டை வளாகம் மூடப்­பட்­ட­தில் 53,000 வட கொரிய ஊழி­யர்­கள் நேற்று பணிக்கு வர­வில்லை. அந்த வளா­கத்­தில் ஒரு பொறி­யி­யல் நிறு­வ­னத்­தின் மேலாளர் ஜாங் இக்=ஹோ, "என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. நிறு­வ­னங்கள் சிறப்­பாக இயங்க கடும் உழைப்பைப் போட்­டி­ருக்­கி­றோம். என்ன நியாயம் இது?," என்று கூறினார்.

வட, தென் கொரிய நாடுகள் சேர்ந்து நடத்­திய, 2004ஆம் ஆண்டில் நிறு­வப்­பட்ட அந்தத் தொழிற்­பேட்டை வளா­கத்­தில் இயங்­கிய 124 நிறு­வ­னங்களும் தற்போது மூடப்­பட்­டுள்ளன. இது குறித்து வட­கொ­ரியா இதுவரை எதுவும் கூற­வில்லை. தனது குடி­மக்­கள் அனை­வ­ரும் எல்லையைக் கடப்­ப­தற்கு அனு ­ம­தி­ய­ளிக்­கு­மாறு கோரிக்கை விடுத்தபோதிலும் பியோங்­யாங் சிலரைத் தடுப்­புக் காவலில் வைக்குமோ என்று சோல் சந்­தே­கிக்­கிறது. அந்­நி­று­வ­னங்கள் மூலம் வட­கொ­ரியா ஈட்டிய தொகையின் பெரும் பகுதி கிம் ஜோங் உன்னின் உள்­வட்­டத்­துக்­கும் அந்­நாட்­டின் அணு­வா­யு­தத் திட்­டங்களுக்­கும் போனது.


சென்ற வாரம் வட­கொ­ரியா தொலைதூர ஏவு­கணைச் சோதனை மேற்கொண்டது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து கேசோங் தொழிற்­பேட்டை மூடப்பட்டது. சோதனைச் சாவடியில் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!