ஹாங்காங் கலவரம்: 37 பேர் மீது குற்றச்சாட்டு

ஹாங்காங்: ஹாங்காங்­கில் சென்ற செவ்­வாய்க்­கிழமை ஏற்­பட்ட கல­வ­ரம் தொடர்­பில் கைதா­ன­வர்­களில் 37 பேர் மீது நேற்று கவ்லூன் நீதி­மன்றத்­தில் குற்றம் சாட்­டப்­பட்­டது. ஹாங்கா­கின் உள்­நாட்­டுப் பேச்­சா­ளர் எட்­வர்ட் லியுங், மாணவர் பத்­தி­ரிகை­யா­ளர் ஸ்டீ­ஃ­பென் கூ ஆகியோர் குற்­றஞ்சாட்­டப்­பட்­ட­வர்­களில் முக்­கி­ய­மா­ன­வர்­கள். ஏப்ரல் 7ஆம் தேதி வழக்கை ஒத்தி வைக்­கு­மாறு லியுங் கோரினார். ஒருவரைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட அனைவரது வழக்கும் அதே நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக அனைவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டதுடன் அவர்கள் தடை உத்தரவையும் எதிர்நோக்குகின்றனர்.

21 வய­தா­கும் ஹோ சியூ சியுங் நீதி­மன்றத்­தின் முன்பு முதலில் முன்­னிலைப்­படுத்­தப்­பட்­டார். பிப்­ர­வரி 8, 9 தேதி­களில் கல­வ­ரம் செய்த குற்றம் அவர் மீது சுமத்­தப்­பட்­டது. ஃபை யுயென் ஸ்த்ரீட், டன்டாஸ் ஸ்த்ரீட், ஷாங்காய் ஸ்த்ரீட் ஆகிய பகு­தி­களுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்­கப்­பட்­டது. மோங் கோக் பகு­தி­யில் சில்­லறைப் பொருட்­கள் விற்கும் தற்­கா­லி­கக் கடைகள் நடத்­திய கடைக்­­­கா­­­ரர்­­­களுக்கு ஆத­­­ர­­­வாக ஆத்­­­தி­­­ரத்­­­தில் அங்கே சேர்ந்த கூட்­­­டத்தை விலக்க கல­­­கத் தடுப்பு போலிசார் வான் நோக்கி இரண்டு முறை சுட்­­­ட­தில் அந்தக் கல­வ­ரம் வெடித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!