சென்னை: தமிழகத்தில் இப்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாக பிரபல பட்டிமன்ற பேச் சாளரும் திமுக தலைமைக்கழகப் பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், முதல்வரின் காலில் விழுவதையே தமிழக அமைச்சர்கள் முக்கிய வேலையாக செய்து கொண்டிருப் பதாகச் சாடினார். "தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்துக்கு வரு வதே அரிதாக உள்ளது. அப்படியே வந்தாலும் அவர் இருபத்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே அங்கு இருக்கிறார்.
"தமிழகத்தில் இப்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி நடக்கிறது. அதன் மூலம்தான் முதல்வர் கட்டடங்களைத் திறந்து வைக்கிறார். உண்மையில் அந்தக் கட்டடங்கள் எல்லாம் புதிதாகத் திறக்கப்படுவதுதானா? எனும் சந்தேகம் எழுகிறது," என்றார் லியோனி. சோதிடர்களின் ஆலோசனைப்படியே அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், இதுபோன்ற ஆட்சி தமிழகத்தைத் தவிர உலகில் வேறு எங்குமே இல்லை என்றார்.