புதுவை: சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமின்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் கேட்டுக் கொண்டுள்ளார். புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர்களுக்கு மது, பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதிபடத் தெரிவித்தார்.
"தேர்தலின் போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக வாக்களிக்கப்பதற்காக பணம், மது தரப்படுவது தடுக்கப்படும். அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல்களும் மே 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்," என்றார் நசிம் சைதி.