‘ஒருநாள் துப்புரவாளராக’ அனுபவம் பெற்ற நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

நகர மன்றத் துப்­பு­ர­வா­ளர்­களின் பணி எத்­தகை­யது என்பது பற்றிய அனு­ப­வத்தைப் பெற்றார் நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லுயிஸ் இங். முதல் முறையாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கி­யி­ருக்­கும் அவர், நேற்று முன்­தி­னம் தெருக்­களைப் பெருக்­கு­தல், குப்பைத் தொட்­டி­களில் உள்ள குப்பை­களைச் சேக­ரித்­தல் போன்ற பணிகளை நீ சூன் நகர மன்றத் துப்­பு­ர­வா­ளர்­களு­டன் இணைந்து மேற்­ கொண்டார். அது தொடர்பிலான படங்கள் அவரது 'ஃபேஸ்­புக்' பக்­கத்­தில் இடம்பெற்றன.

"உட­லுக்கு மிகவும் சோர்வை உண்டாக்­கக்­கூ­டிய கடி­ன­மான பணியாக இருந்தது. துப்­பு­ர­வா­ளர் ஹனிஃப் இப்­ப­குதி மக்­க­ளால் எந்த அள­வுக்கு விரும்பப்­படு­கிறார் என்­பதை­யும் அவர் எப்படி எப்­போ­தும் புன்­மு­று­வ­லு­டன் இருக்­கிறார் என்­பதை­யும் நான் தெரிந்­து­கொண்­டேன்," என்று திரு இங் பதி­விட்­டி­ருந்தார். திரு இங்கின் 'ஃபேஸ்­புக்' பக்­கத்­தில் பலரும் ஊக்­கு­விக்­கும் விதமான கருத்­து­களைத் தெரி ­வித்­தி­ருந்த­னர். மேம்பட்ட துப்­பு­ரவு உப­க­ர­ணங்கள் இருந்தால் துப்­பு­ர­ வா­ளர்­கள் பயன்­பெ­று­வர் எனச் சிலர் கருத்­துரைத்­தி­ருந்த­னர்.

நீ சூன் நகர மன்றத் துப்புரவாளர்களுடன் சேர்ந்து அக்குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் (வலக்கோடி) 'ஒருநாள் துப்புரவாளராக' பணி செய்து அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி அறிந்துகொண்டார். படம்: திரு லுயிஸ் இங்கின் 'ஃபேஸ்புக்' பக்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!