தமிழகத்தை மீட்டெடுக்க தேமுதிக பாடுபட வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தை மீட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என தேமுதிக தலைவர் விஜய காந்த் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணா நிதியைப் போல் தன் கட்சித் தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் இப்போது லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டி உள்ளார். தமிழக மக்களின் ஆதரவோடு தேமுதிக வெற்றிகரமாகச் செயல் பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் 20ஆம் தேதியன்று காஞ்சிபுரத்தில் மிக முக்கியமான மாநாடு நடைபெற உள்ளதாகக் கூறியுள்ளார். "தேமுதிக சார்பில், ஏற்கெனவே பல மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். ஒவ்வொரு மாநா டும், அந்தந்தக் காலகட்டத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள் ளது. அந்த வரிசையில் காஞ்சி புரத்தில் தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடு நடக்கவுள்ளது.

"தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் சக்தி, தேமுதிகவுக்கு உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில், இந்த மாநாடு நடக்கிறது," என்று விஜய காந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது என்று சாடியுள்ளார். "விவசாய தொழிலும் நலி வடைந்து விட்டது. இந்த நிலையில் இருந்து, தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கு அடித்தளம் இடும் வகையில், கட்சி மாநாடு அமைய வேண்டும். "வரலாற்றில் இடம்பெறும் வகையில், மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும்," என தொண்டர்களுக்கான கடிதத்தில் விஜயகாந்த் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!