இந்தியாவின் மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் 12 கிலோ தங்கக் கட்டிகள் நூதனமாகக் கடத்தப்பட்ட சம்பவத்தை முறி யடித்துள்ளனர். திரைப்படத்தில் வருவதைப்போல அந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது. மலேசியாவிலிருந்து சரக்குக் கப்பல் மூலம் சலவை சோப்புத் தூள் என்ற பெயரில் அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட சரக்கு கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. நேற்று முன்தினம் அந்தக் கப்பல் துறைமுகத்தை அடைந்த தும் சலவை சோப்புத் தூள் அடங் கிய கொள்கலன் திறக்கப்ப டாமலேயே துறைமுக அதி காரிகளின் ஒப்புதலைப் பெற்றது.
பின்னர் அங்கிருந்து சிறிது தொலைவில் மாப்பிள்ளை ஊரணி என்னும் இடத்தில் உள்ள தனியார் சரக்குக் கொள்கலன் கையாளும் இடத்திற்கு சோதனைக்காக அக் கொள்கலன் கொண்டு செல்லப் பட்டது. அந்தக் கொள்கலன் தாங்கிய அதே எண் கொண்ட போலி கொள்கலன் ஒன்று செல் லும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆள்நடமாட்டம் -குறை வாக உள்ள அப்பகுதியில் வைத்து சோப்புத் தூள் பெட்டிகளை இறக்கி அவற்றுனுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கட்டிகளை எடுத்துவிட்டு அந்தப் பெட்டிகளை அப்படியே போலி கொள்கலனில் ஏற்றுவது திட்டம்.