இந்திய ரூபாய் 29 மாதங்கள் காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 29 மாதங்களில் காணாத வீழ்ச்சியை நேற்றுச் சந்தித்தது. காலைநேர வர்த்த கத்தில் ஓர் அமெரிக்க டால ருக்கு 68.37 ரூபாய் என்று அதன் மதிப்பு இறங்கியது. ஏற்கெனவே கடந்த புதன் கிழமை 68.30 என்னும் நிலைக்கு இறங்கிய அதன் மதிப்பு நேற்று மேலும் சரிந்தது. சில உலக நாணயங் களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்த தால் ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சிக்குச் சென்றதாக பொருளியல் வல்லுநர்கள் கூறினர். சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்து நேற்றுக் காலையில் ஒரு வெள்ளிக்கு 48.50 என்று இருந்ததை 'டிபிஎஸ் இந்தியா ரெமிட்' இணையத்தளத்தில் காண முடிந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!