‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ நம்மை புதுப்பிக்க வாய்ப்பளிக்கிறது

25 வயது அல்லது அதனைத் தாண்டிய 2.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் இம்மாத இறுதிக்குள் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' நிதித் திட்டத் தின் கடிதங்களைப் பெறுவார்கள் என்று ஊழியரணி மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிதி காலாவதியாகாது. அது இதர அரசாங்க மானியங்களுக்கு மேல் அவ்வப்போது சிங்கப்பூரர்களின் கணக்குகளில் நிரப்பப் படும். எதிர்காலத் திறன் வளர்ச்சித் திட்டமான 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' மக்கள் தங்களுக்குள்ள ஆற்றல்களை மேம்படுத்தி, வாழ்க்கையில் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது என்று துணைப் பிர தமர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.

ஊழியரணி மேம்பாட்டு வாரி யத்தின் ஏற்பாட்டில் ஜூரோங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள 'வெஸ்ட் கேட்' கட்டடத்தில் நேற்று 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மார்க்கெட் பிளேஸ்' எனும் திறன் பயிற்சி பற்றிய சாலைக் காட்சியைத் திறந்து பொருளியல், சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கி ணைப்பு அமைச்சருமான திரு தர்மன் பேசினார்.

"இந்தத் திறன் வளர்ச்சி நிதி உதவித் திட்டம் அனைவருக்குமானது. முதல் வேலையில் சேர்ந்து உள்ள இளையர்கள், ஊழியரணிக் குத் திரும்ப எண்ணியுள்ள இல் லத்தரசிகள், வேலை மாற்றம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் இடைப்பருவ வாழ்க்கைத் தொழிலர்கள், வாழ்நாள் கல்வியைத் தொடர விரும்பும் பதவி ஓய்வு பெற்றவர்கள் போன்ற யாராகினும் இதன் மூலம் பயன்பெறலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!