நகருக்குள் புகுந்து யானை அட்டகாசம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நகரப் பகுதியில் அட்டகாசம் செய்த யானை நீண்ட நேரத்திற்குப் மடக்கி பிடிக்கப்பட் டது. காட்டுக்குள் திரிந்துகொண் டிருந்த அந்த யானை வழிதவறி சிலிகுரி நகருக்குள் நுழைந்ததாக வும் நிறைய ஆட்களைக் கண்ட தோடு வாகன ஒலிகளையும் கேட்ட அந்த யானை மிரண்டு கண்போன போக்கில் ஓடத் தொடங்கியதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை நகரின் பல பகுதிகளிலும் ஓடிய அந்த காட்டு யானை பத்துக்கு மேற்பட்ட வீடுகளையும் கடைகளையும் சேதப்படுத்தியது.

கார் ஓடும் சாலையில் திடீர் என யானை ஓடி வந்ததால் பொதுமக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று ஓடினர். சாலையில் இருந்தவர்கள் ஒடிச் சென்று அருகிலிருந்த கடைகளின் மாடிப் பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் களையும் இருசக்கர வாகனங்ளை யும் யானை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த வேளையில் தகவலறிந்து விரைந்து வந்த வனத் துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தினர். மயங்கிய யானையின் கால்கள் கட்டப்பட்டு ராட்சத பாரந்தூக்கி மூலம் அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!