லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லெஸ்டர் சிட்டி குழுவினால் பிரிமியர் லீக் வெற்றியாளர் கிண்ணத்தை வெல்ல முடியும். ஆனால் இதில் அவர்கள் சந்திக்கக்கூடிய நெருக்குதலை தங்களால் எதிர்த்து சமாளிக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபிக்கவேண்டும் என்று மான் செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி வேன் ஹால் கருத் துரைத்துள்ளார். "மற்ற குழுக்களைக் காட்டிலும் அவர்கள் ஐந்து புள்ளிகள் அதிக மாகப் பெற்று முன்னணியில் இருப்பதால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் அவர்கள் வெற்றிக் கிண்ணத்தை வெல்லும் தறுவாயில் நிலைமை வேறுவிதமாக மாறும்," என்று இண்டிபென்டண்ட் செய்தித் வேன் ஹால் கூறியுள்ளார்.
பிரிமியர் தரவரிசைப் பட்டியலில் லெஸ்டர் சிட்டி குழு டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், ஆர்சனல் ஆகிய குழுக்களைக் காட்டிலும் ஐந்து புள்ளிகள் அதிகமாக எடுத்து முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், நாளை ஞாயி றன்று லெஸ்டர் குழு ஆர்சனலை எதிர்கொள்கிறது. அதேவேளை ஸ்பர்ஸ் குழு மான்செஸ்டர் சிட்டி குழுவை எதிர்கொள்கிறது. லெஸ்டர் பற்றிக் கூறும் வேன் ஹால், "லெஸ்டர் தங்களின் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக் கின்றனர்.
"அது முடியுமா என்று என்னைக் கேட்டால், ஏன் முடியாது என்று கேட்கத் தோன்றுகிறது. "அந்த நெருக்குதலை ஒரு வேளை அவர்களால் சமாளிக்க முடியும், ஆனால் அது இப்பொழுது நமக்குத் தெரியாது. "அந்தக் கேள்விக்கான விடை லெஸ்டர் சிட்டியிடமும் ஸ்பர்ஸ் குழுவிடமும்தான் உள்ளது," என்று நாளைய ஆட்டங்களில் இந்த இரு குழுக்களும் வெல்ல வேண்டிய அவசியத்தை வேன் ஹால் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், நாளைய போட்டி யில் ஆர்சனல் குழுவை லெஸ்டர் வெற்றி கொண்டால் அதன் பின் ஆர்சனல் வெற்றி பெறுவதைப் பற்றி கனவு காண்பதில் அர்த்த மிராது என்றார் மான் செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி வேன் ஹால் கருத்துரைத்துள்ளார்.
மான் செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி வேன் ஹால். ராய்ட்டர்ஸ்