வழக்கறிஞராகப் பாசாங்கு செய்து ஏமாற்றியவருக்கு 89 மாதச் சிறை

வழக்கறிஞராகப் பாசாங்கு செய்து 21 பேரிடமிருந்து ஏறத்தாழ 1.8 மில்லியன் வெள்ளி அபகரித்த ஆடவருக்கு 89 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தம்மீது சுமத்தப்பட்ட 23 குற்றச்சாட்டுகளை 39 வயது சிம் டீ பெங் (படம்) ஒப்புக்கொண்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் மோசடி, பணம் கையாடல், திருட்டு, போலி ஆவணம் தயாரித்தல், பொய்த் தகவல் வழங்குதல் ஆகியவை அடங்கும். சிம்முக்கு எதிராக மேலும் 41 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. சிம்முக்கு விதிக்கப்பட்ட 89 மாதச் சிறைத் தண்டனையில் சொத்துப் பரிவர்த்தனைகளுக்காகப் போலி முத்திரைப் பத்திரங்களைத் தயாரித்த குற்றத்துக்காக விதிக்கப்பட்ட 12 வாரச் சிறைத் தண்டனையும் அடங்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!