வரி ஏய்ப்பு: ஆடவருக்குச் சிறைத் தண்டனை, அபராதம்

வரி ஏய்ப்பு குற்றத்தின் பேரில் இணையம் வழி விபசாரம் நடத்திய ஆடவர் ஒருவருக்குச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 'பிரிஸ்டிஜ் டேலன்ட்ஸ் மேனேஜ்மண்ட்' நிறுவனத்தின் உரிமையாளரான 38 வயது சியூ தியோங் வெய் $26,964.65 பெறு மானமுள்ள வரி செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு குற்றத்தின் பேரில் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை சியூ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப் பட்டது.

24,000 வெள்ளி பெறுமான முள்ள உற்பத்தித்திறன் புத்தாக்கத் திட்டத்திற்கான ரொக்க சலுகை, போனசைப் (பிஐசி) பெற தாம் பொய்க் கணக்குக் காட்டியதை சியூ ஒப்புக்கொண்டார். சியூ மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு வரி ஏய்ப்புக் குற்றச் சாட்டுக்கும் அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. செலுத்தப்படாத வரிப் பணத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக $80,893.95 அபராத மும் விதிக்கப்பட்டது. தவறான முறையில் உற்பத் தித்திறன், புத்தாக்கத் திட்டத் திற்கான ரொக்க சலுகை, போனசைப் பெற்றதால் அதற்குத் தண்டனையாக, பெறப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக $72,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தக் குற்றத் துக்கும் அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!