ஆட்டோ ரிக்‌ஷாவை அடகுவைத்து பயணிக்கு உதவிய ஓட்டுநர்

சென்னை: நல்ல உள்­ளம் கொண்ட ஆட்டோ ஓட்­டு­நர் ரவிச்­சந்­தி­ரன் நேற்று சென்னை­யில் கௌர­விக்­கப்­பட்­டார். சில மாதங்களுக்கு முன் தனது ஆட்­டோ ­ரிக்­ஷா­வில் பய­ணம் செய்த பயணி ஒரு­வர் நெஞ்­சு­வ­லி­யால் துடித்­தார். இதை­ய­றிந்த ரவிச்­சந்­தி­ரன், அந்தப் பய­ணியைப் பத்­தி­ர­மாக சரியான நேரத்தில் அரு­கே­யுள்ள ஒரு மருத்­து­வ­மனை­யில் சேர்த்து அவ­ருக்கு சிகிச்சை­ய­ளிக்­கச் செய்து காப்­பாற்­றினார். மருத்­து­வ­மனை­யில் தந்தை சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும் செய்­தி ­ய­றிந்த பயணியின் மகன் கோல் ­கத்­தா­வில் இருந்து விமா­னம் மூலம் சென்னை­யில் உள்ள மருத்­து­வ­மனைக்கு வந்து சேர்ந்தார்.

அவ­ரது தந்தை­யின் மருத்­து­வக் கட்­ட­ண­மான 47,000 ரூபாயைச் செலுத்­து­வ­தற்­குப் போது­மான பணம் அவ­ரி­டம் இல்லை. விமா­னக் கட்­ட­ணத்­திற்குச் செலவு செய்­த­து­போக அவ­ரி­டம் 15,000 ரூபாய் மட்­டுமே கையில் இருந்தது. இதை­ய­றிந்த ஆட்டோ ஓட்­டு­நர் ரவிச்­சந்திரன் தன்­னி­டம் இருந்த ஒரே சொத்­தான அவ­ரது ஆட்­டோ­ ரிக்‌ஷாவை அட­கு வைத்து பணம் பெற்று, பயணி யின் மருத்­து­வ­மனைக் கட்­ட­ணத்தைச் செலுத்­தி­ய­தாக நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் நாளி­த­ழுக்கு அளித்த பேட்­டி­யில் அவர் தெரி­வித்­தார். இந்தச் செய்­தி­ய­றிந்த அண்ணா ஆட்டோ நல அறக்­கட்­டளை திரு ரவிச்­சந்­தி­ர­னின் மனி­தா­பி­மா­னத்தை­யும் தைரி­யத்தை­யும் பாராட்­டிக் கௌர­வித்­தது.

ஆட்டோ ஓட்­டு­நர் ரவிச்­சந்திரன். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!