காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள லட்சுமிமேனன்

'கொம்பன்' ஆகிய இரு படங் களிலுமே லட்சுமி மேனன் நடித்ததால் அந்தப் படத்தை இயக்கிய முத்தையாவுக்கும் லட்சுமி மேனனுக்கும் இடையே காதல் தீ பற்றி எரிவதாக சுடச்சுட செய்திகள் வெளியாகி உள்ளன. அதோடு, இப்போது விஷாலை வைத்து தான் இயக்கி வரும் 'மருது' படத்திற்கும் முதலில் லட்சுமி மேனனைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தார் முத்தையா. ஆனால், விஷாலின் தலை யீடடின் பேரில் 'மருது' பட நாயகி யாக ஸ்ரீதிவ்யா ஒப்பந்த மானார். ஆக 'மருது' படத்திலும் லட்சுமி மேனனையே நடிக்கவைக்க முத்தையா முயற்சி செய்த விஷயம் வெளியில் பரவியதை அடுத்து, ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித் துப் பார்க்கையில் அவர்களுக் கிடையே காதல் நெருப்பு புகையும் செய்தி இன்னும் வேகமாகப் பரவி வருகிறது.

ஆனால், இதுகுறித்து லட்சுமி மேனனோ முத்தையாவோ இது வரை வாய்திறந்து கருத்தேதும் சொல்லாமல் அவரவர் வேலையில் பரபரப்பாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அண்மையில் அதுகுறித்த கேள்விக்கு லட்சுமி மேனன் பதிலளிக்கையில், "எனக்கு யார் மீதும் காதல் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. படிப்பு, நடிப்பு என்று பரபரப்பாக என் வாழ்க்கையுடன் இயங்கிக் கொண்டு இருக்கிறேன். "நான் தற்போது தனிப்பறவை யாகத்தான் இருக்கிறேன். எனக்கு அவர் மீது காதல் இல்லை. ஆனால், அதேவேளையில் நீங்கள் சொல்லும் அந்த இயக்குநருக்கு என் மீது காதல் இருக்கிறதா என்பது குறித்து எனக்குத் தெரிய வில்லை," என்று கூறி காதல் கிசு கிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லட்சுமி மேனன்.

'கொம்பன்' படக்காட்சியில் கார்த்தி, லட்சுமி மேனன். படங்கள்/ செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!