ஜீவா: “மறுபடியும் வந்துட்டேன்”

ஜீவா, ஹன்சிகா மோத்வானி, சிபிராஜ் நடிக்கும் படம் 'போக்கிரி ராஜா'. 'புலி' படத்தைத் தயாரித்த பி.டி.செல்வகுமார் தயாரிக்கிறார். நேற்று முன்தினம் ஜீவா 'போக்கிரி ராஜா' படத்தின் முதல் படத்தை இணையத்தில் வெளியிட்டு, "மறுபடியும் வந்துட்டேன்," என்று குறிப்பிட்டிருக்கிறார். படத்தில் ஜீவாவும், ஹன்சிகாவும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். சின்னச் சின்ன மோதலைத் தொடர்ந்து இருவருக்குள்ளும் காதல் வளர்கிறது. ஜீவாவின் நண்பர் சிபிராஜ். படிக்காதவர் சின்னச் சின்ன ரௌடித்தனங்கள் செய்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கி றவர். சிபிராஜால் ஜீவா, ஹன்சிகா காதல் உடைகிறது. ஹன்சிகாவால் ஜீவா, சிபிராஜ் நட்பு விரிசல் அடைகிறது. ஒன்றாக இருந்த மூவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிகிறார்கள்.

அதன் பின்னர் ஜீவா, ஹன்சிகா பிரிந்ததற்கு சிபிராஜ் காரணமல்ல. ஜீவா, சிபிராஜ் பிரிந்ததற்கு ஹன்சிகா காரணமல்ல. எல்லாவற்றுக்குமே ஒரு தவறான ஒரு கற்பனைதான் காரணம். அது என்ன என்பதுதான் முடிவு. முதல் பாதியை நகைச்சுவையாகவும் மறுபாதியை பொழுதுபோக்காகவும் எடுத் திருக்கிறார்கள். படத்தில் நிறைய 'கிராபிக்ஸ்' வேலைகள் இருக்கின்றன. இந்தப் படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைத்திருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தை 'காஸ்மோ வில்லேஜ்' நிறுவனத்தின் சார்பில் சிவகுமார் வெளியிடுகிறார். 'யான்' பட தோல்விக்குப் பிறகு மறுபடியும் முழு உற்சாகத்துடன் களமிறங்கி இருக்கிறார் ஜீவா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!