ஸைனல்: சம்பளத்தைப் பாதிக்கும் வெளிக்குத்தகை

வெளிக்குத்தகை முறையால் சம் பளத்தில் தேக்கநிலையைச் சந்திக் கும் துப்புரவாளர்கள், பாதுகாவலர் கள் போன்ற குறைந்த சம்பள ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு மேலும் அதிகம் செய்யலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸைனல் சப்பாரி தெரிவித்துள்ளார். தேசிய தொழிற்சங்க காங்கிர சின் உதவித் தலைமைச் செயலாள ரான திரு ஸைனல், அத்தகைய ஊழியர்களுக்கு முற்போக்குச் சம்பளத் திட்டம் உதவினாலும் அது ஒரு மந்திரக்கோல் அல்ல என்று தமது வலைப்பதிவில் குறிப் பிட்டுள்ளார். குத்தகைப் புதுப்பிக்கப்படும் போது சம்பளம் மாற்றியமைக்கப்படு வதை அந்தத் திட்டத்தால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர்கள் தங்களது 13வது மாத போனசுக்கும் வருடாந்திர சம்பள உயர்வுக்கும் உத்தரவாதம் அளிக்க அத்திட்டத் தால் இயலாத நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். துப்புரவு, பாதுகாவல், நில வனப்பு ஆகிய மூன்று துறைகளுக்காக முற்போக்கு சம்பளத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சேவை அளிப்பவர்களும் சேவை குத்தகை எடுப்பவர்களும் தங்களது ஊழியர் களுக்கு ஒரே அளவிலான சம்பள முறையை உருவாக்குவதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இத்திட்டம் விளங்குகிறது.

இந்நிலையில் நேற்று 'லேபர்பீட்' என்னும் வலைப்பதிவில் தமது கருத்துகளைத் தெரிவித்த திரு ஸைனல், சம்பள உயர்வையும் 13ஆவது மாத போனசையும் தர இயலாத நிலையில் முற்போக்கு சம்பளத் திட்டம் இந்த மூன்று துறைகளுக்கும் கட்டாயமாக்கப்பட் டது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். திட்டம் கட்டாயமாக்கப்படும் போது சேவை வழங்கும் அனை வரும் அத்திட்டத்திற்கு இணங்கி நடந்து ஊழியர்களுக்கு சிறந்த பலனைத் தரவேண்டியிருக்கும் என்றார் அவர். அதேபோல தேசிய சம்பள மன் றத்தின் பரிந்துரைகள் குறித்தும் திரு ஸைனல் கருத்து வெளியிட்டு உள்ளார். "தேசிய சம்பள மன்றத்தின் கவனத்திற்கு, இதுபோன்ற வெளிக் குத்தகை ஊழியர்களுக்கு உங் களது பரிந்துரைகள் பலனளிக்க வில்லை," என்று அவர் வலைப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!