போரை நிறுத்த சிரியா எதிர்த்தரப்பு மறுப்பு

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசாங் கத்துக்கு எதிராக போரிட்டு வரும் எதிர்த்தரப்பு கிளர்ச்சி யாளர்கள் சண்டையை நிறுத்த மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துக்கு ஆதரவான தாக்குதல்களை ரஷ்யா நிறுத்தாது என்று கிளர்ச்சிக்காரர்கள் நம்பு வதே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிரியாவில் ஒரு வார காலத்தில் போர் நடவடிக்கைகளை நிறுத்தும் உடன்பாடு குறித்து கிளர்ச்சி யாளர்கள் ஐயம் எழுப்பியிருக் கின்றனர். மேலும் சிரிய அதிபர் பஷார் அல்=ஆசாத்தை அகற்ற வும் அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக பேசிய அதிபர், கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்ற விரும்புவ தாகக் கூறினார். இந்த நிலையில் மூன்று கிளர்ச்சி அமைப்புகளும் போர் நிறுத்த உடன்பாட்டில் சந்தேகங் களை வெளிப்படுத்தியுள்ளன. சுதந்திர சிரியா ராணுவத்தின் பேச்சாளர் ஒருவர், "ரஷ்யர்கள் மீது எப்போதும் எங்களுக்கு சந் தேகம் உள்ளது," என்றார் மற்றொரு பழமையான கிளர்ச்சி அமைப்பான அஹ்ரார் அல்=ஷாம், அரசாங்கம் குண்டு மழை பொழிவதை நிறுத்தும் வரை ஓய மாட்டோம் என்று கூறியது.

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் போரை நிறுத்த மாட்டோம் என்று சூளுரைத்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!