தேர்தல்: மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களத்தில் விரைவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியை இணைப்பதற் கான முயற்சிகள் தொடங்கி உள்ளன. ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வரு மான அரவிந்த் கெஜ்ரிவாலை அண்மையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார்.

இதையடுத்து கொள்கை அடிப்படையில் மக் கள் நலக் கூட்டணியில் ஆம் ஆத்மி இணையும் எனக் கூறப்படுகிறது. மாற்று அரசியலுக்காக உருவாக்கப்பட்ட அணி என மக்கள் நலக் கூட்டணி குறித்து அதன் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக, திமுக, பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தைச் சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என் றும் இக்கூட்டணித் தலைவர் கள் கூறுகின்றனர்.

இதையடுத்து தேமுதிக, தமாகா உள்ளிட்ட சில கட்சி களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட் டது. ஆனால் இரு கட்சிகளுமே இதுவரை சாதகமான பதில் எதையும் மக்கள் நலக் கூட்ட ணிக்கு தரவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!