ராமதாஸ்: கூட்டணிக்குப் பதில் கட்சியையே கலைத்துவிடலாம்

தி.மலை: அதிமுக திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பதில் கட்சியையே கலைத்துவிடலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசத்துடன் கூறினார். செய்யாறு பகுதியில் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த தேர்தல்களின் போது கட்சித் தொண்டர்கள் பேச்சைக் கேட்காமல் சில கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தது தவறானது என்றார். இனிமேல் பாமக தேர்தல் களத்தில் தனித்துதான் போட்டியிடும் என்று குறிப்பிட்ட அவர், இம்முறை பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணியின் பிரசார சூறாவளியில் இரட்டை இலை பறக்கப் போவது நிச்சயம் என்றார். "ஊழல் பெருச்சாளியான முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் நான் காண்டு சிறைவாசம் நிச்சயம். ஊழல் மகாராணி இன்னும் ஒன்றரை மாதத்தில் ரூ.100 கோடி அபராதத்துடன் மீண்டும் சிறைக்குச் செல்வார். எனவே பாமகவால் மட்டுமே மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியும்." என்று டாக்டர் ராமதாஸ் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேர் தல் சமயத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதே அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!