மாதத்தின் சிறந்த வீரர் விருதை முதல்முறையாக வென்ற மெஸ்சி

பார்சிலோனா: ஸ்பானிய லீக்கின் கடந்த மாதத்திற்கான ஆகச் சிறந்த ஆட்டக்காரர் விருதை பார்சிலோனா குழுவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி வென்றுள்ளார். இதற்கு முன்பு பார்சிலோனாவின் நெய்மார் இந்த விருதைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வென்றிருந்தார். ரியால் மட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு முறை இவ்விருதைப் பெற்றுள்ளார்.

கிரானாடா அணிக்கு எதிராக மெஸ்சி 'ஹாட்ரிக்' கோல் அடித்திருந்தார். அத்துடன் அட்லெட்டிக் பில்பாவ், மலாகா, அட்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கு எதிராக பார்சிலோனா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். தமது அதிரடியாட்டத்தினால் ரசிகர்களைப் பிரம்மிப்பூட்டும் மெஸ்சிக்கு இந்த விருது கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!