‘கொசுவை ஒழிப்போம்’ இயக்கம் இம்மாதம் தொடங்குகிறது

இவ்வாண்டின் முதல் சில வாரங்களில் டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, இவ்வாண்டு கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கிவிட அதிகாரிகள் முடிவெடுத்து உள்ளனர். டெங்கி காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதம் முதலே கணிசமாக அதிகரித்துள்ளது என்றார் சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர். கொசு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்களைக் கொண்டிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களின் மேயர்களும் தங்கள் வட்டாரங்களில் வரும் 28ஆம் தேதியன்று 'கொசுவை ஒழிப்போம்' இயக்கத்தைத் தொடங்க இருக்கின்றனர்.

கொசு இனப்பெருக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டின் மத்தியில் உச்சத்தைத் தொடும் டெங்கி தொற்றைச் சமாளிக்க, ஏப்ரல் மாதம் அல்லது அதற்குப் பிறகு இந்த இயக்கம் நடத்தப்பட்டு வந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!